LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Saturday, November 7, 2020

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானார்!

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் உத்தியோகபூர்வ தகவல்களின்படி 273 இடங்களில் வெற்றிபெற்று 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதியாக  ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் தேர்வாகவுள்ளனர்.

இதேவேளை, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 284 இடங்களையும், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களையும் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்க தேர்தலில் ‘நானே அதிக அளவில் வென்றேன்’ என்ற ஒற்றை வரியை தனது ருவிற்றர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்தப் பதிவை நீக்கியபின்னர், மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக  கூறியுள்ளார்.


 

Thursday, November 5, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை; ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள்


அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்தங்கி இரண்டாம் நிலையில் உள்ளார்.

அதன் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு இதுவரையில், 264 இடங்களில் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு 214 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

பெரிது எதிர்பார்க்கப்பட்ட மாகாணங்களான புளோரிடா, லோவா, டெக்ஸ்சாஸ், ஓஹியோ, உள்ளிட்ட மாகாணங்களை டொனால்ட் ட்ரம்ப் கைப்பற்றியுள்ள போதும் அவருக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அரிஸோனா, மிச்சிக்கன், நியூ ஹம்ஷைர் உள்ளிட்ட மாகாணங்கள் ஜோ பிடன் வசமாகியுள்ளது.

இதேவேளை தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

எதிர்த்தரப்பினர் தேர்தல் வெற்றியினைத் திருடுவதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ருவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்கு ருவிட்டர் நிர்வாகம் தனது கண்டனங்களை வெளியிட்டிருந்தது.

மேலும், தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு முடிவுகளை பெற அவர் நீதிமன்றத்தாய் நாடுவதாக அவர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 4, 2020

ட்ரம்பின் பதிவுக்கு டுவிட்டர் நிர்வாகம் கண்டனம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு டுவிட்டர் நிர்வாகம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் வெற்றியினை எதிர்த் தரப்பினர் களவாடுவதற்கு முனைவதாகவும் அதற்க்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் நிர்வாகம் குறித்த பதிவின் முலம் தேர்தலை ட்ரம்ப் தவறாக வழிநடத்துவதாகவும் அதற்க்கு தமது கண்டனங்களை பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.


 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : நியூயோர்க், நியூஜெர்சி, ஜோ பைடன் வெற்றி


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள அதேவேளை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களையும் கைப்பற்றியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் டொனால்ட் ட்ரம்ப் ஓக்லஹாமா, கென்டக்கி, இண்டியானா, டென்னிஸி, மேற்கு வெர்ஜினியா மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Thursday, May 7, 2020

சிங்கப்பூரில் சிக்கித் தவித்த மாணவர்கள் நாடு திரும்பினர்!

சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 186 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல்-302 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானமானது இன்று காலை 7.30 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டிருந்தது.

விமானத்திலிருந்து தரையிறங்கிய மாணவர்களை இலங்கை விமானப் படையினரும் சுகாதார அதிகாரிகளும், கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தினர்.

இதையடுத்து குறித்த மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவ பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Wednesday, May 6, 2020

கொரோனா – இத்தாலியின் மொத்த மரண எண்ணிக்கையை, பிரிட்டன் கடந்தது.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் +693  பேர் மரணித்துள்ளதாக . இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 29,427  ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில்   பிரிட்டன் மீண்டும்  உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்பெயின் +185  இறப்புகளையும், இத்தாலி +236 இறப்புகளையும், பிரான்ஸ் 330  இறப்புகளையும்  பதிவு செய்துள்ள நிலையில், உலக அளவில் அமெரிக்காவின் +887  என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அத்துடன் இத்தாலியின் மொத்த இறப்புகளை விட  அதிக எண்ணிக்கையை பிரிட்டன் எட்டியுள்ளது. பிரான்ஸ்  நாளாந்த இறப்பு எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில்,புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +4,406 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 194,990 ஆக உயர்ந்துள்ளது.



இதேவேளை 5pm 30 April 2020 – 5pm 01 May  2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 66 பேரில்,  ஒருவரும், 40 -59 வயதக்கு இடைப்பட்டவர்கள் 2 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 23 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 41  பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.

Total 66
Age group
0-19
20-39
40-59 2
60-79 23
80+ +41
TBC 0

24 மணித்தியாலத்தில், பிரான்ஸில் 330 பேர் உயிரிழப்பு ! – தமிழர்கள் பகுதி, சிவப்பு மண்டலமாக தொடர்கிறது!

கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,365 பேர்
குணமடைந்துள்ளனர் என இன்று செவ்வாயக்கிழமை சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 பேர் மருத்துவமனைகளிலும், 96 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளனர். தற்போது 24 775 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 3 430 பேர் தீவிரிசிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,104 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 987 மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 132,967ஆக பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,531ஆக உயர்ந்துள்ளது. 52,736 பேர் குணமடைந்துள்ளனர்.

அரசாங்கத்தினால் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் நிற மண்டலங்களில், தமிழர்கள் செறிந்து வாழும் இல்-டு-பிரான்ஸ் மண்டலம் தொடந்தும் வைரஸ் உயிர்ப்புடன் உள்ள பிராந்தியமாக மட்டுமல்லாது, மருத்துவனைகளில் நெருக்கடியுள்ள பிராந்தியமாக இன்றும் சிவப்பு மண்டலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Monday, May 4, 2020

நாளாந்த மரணத்தில், பிரிட்டனும் கீழிறங்கியது, எனினும் ஐரோப்பாவில் தொடர்ந்தும் முன்னிலையில்…

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +315  பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பிரிட்டனின் மொத்த மரணங்கள் 28,446 ஆக உயர்ந்துள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில்  பிரிட்டனும் குறைவான மரண எண்ணிக்கைக்கு  கீழிறங்கியது ஆயினும் ஐரோப்பிய நாளாந்த இறப்புகளில் இன்றும் முன்னிலையிலேயே உள்ளது.   ஸ்பெயின் +164 இறப்புகளையும், இத்தாலி +174 இறப்புகளையும், பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் +664 என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அத்துடன் இத்தாலியின் இறப்பு  எண்ணிக்கையை பிரிட்டன்  நெருங்கி வருகிறது.  பிரான்ஸின் – இறப்பு  தரவுகள் வெளியாகவில்லை.

இந்த நிலையில்,புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +4,339  பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 186,599  ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை 5pm 30 April 2020 – 5pm 01 May 2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 56  பேரில்,   40 -59 வயதக்கு இடைப்பட்டவர்கள் 2 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 22 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.



Total 56
Age group
0-19 0
20-39 0
40-59 2
60-79 22
80+ 32
TBC 0

கொரோனா பலிகொண்ட, பிரிட்டனின் முதல் பெண் வைத்தியர் மாமூனா ராணா….

பிரிட்டனில்  COVID-19 நோயாளிகளை பராமரித்துக் கொண்டே  மரணத்தை தழுவிய வைத்தியர்  மாமூனா ராணா…

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில்,  முன்னணி சுகாதாரப் பணியாளராக, கொரோனாத் தொற்று நோயாளிகளைக் காப்பதற்காக போராடிய வேளையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தனது உயிரை அர்ப்பணித்த, பிரித்தானியாவின் முதலாவது பெண் மருத்துவராகிவிட்ட,  அர்ப்பணிப்பும் புகழும் பெற்ற பிரிட்டிஷ் பாகிஸ்தானியரான மருத்துவர் மமூனா றானாவிற்கு, துன்பத்தில் தோய்ந்துள்ள அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்த வகையில் வைத்தியர்  ராணாவின் முகம்,  NHS  முன்னணி தொழிலாளர்கள், தமது  கடமையின் தொடர்ச்சியில்  எதிர்கொள்ளும் திகிலின் வரையறுக்கப்பட்ட உருவமாக மாறியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் மருத்துவரான மமூனா ராணா, கிழக்கு லண்டனில் தனது கணவர் வைத்தியர்  அஜீம் குரேஷி மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

தனது மனைவிக்கு இதய அஞ்சலியை செலுத்திய, நியூஹாம் மருத்துவமனையின் மூத்த மருத்துவராக இருக்கும், கணவரான  வைத்தியர்  குரேஷி,   வைத்தியர்  ராணாவின் நிலை எவ்வாறு விரைவாக மோசமடைந்தது என்பதை விளக்கியுள்ளார். தாம் இருவரும் முன்னணியில் பணிபுரியும் போது தனது  மனைவி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8 ஆம் திகதி வைத்தியர்  ராணா கோவிட் -19 அறிகுறிகளுக்கு உட்பட்டதாக வைத்தியர்  குரேஷி ஜியோ.ரிவியிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின், தாம் இருவரும் கொரோனா வைரஸுக்கான நேர் மறைப் பரிசோதனை செய்ததாகவும், ஏப்ரல் 11 ஆம் தேதி, வைத்தியர்  ராணாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, கிழக்கு லண்டனில் உள்ள விப்ஸ் குரஸ் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலைக்கு (A&E) கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர் ஏப்ரல் 11 ஆம் திகதி இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நிலையில்   ஏப்ரல் 16 அன்று அவர் காலமானார்.

“வைத்தியர் ராணா ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணி, எப்போதும் உயர்ந்த  சிந்தனைகளை கொண்டிருந்தார், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் முடிவில்லாது கொடுத்தார். அவர் எனக்கு நல்ல மனைவியாகவும் மகளுக்கு நல்ல தாயாகவும் விளங்கினார்.  சமநிலை, கருணை, புத்திசாலித்தனம், மென்மையான இயல்பு மற்றும் அழகில் அவள் தனித்துவமானவள். ஒவ்வவொரு கணமும் நான் அவளை  இழப்பேன்.


எனது மனைவியின் இழப்பு  குடும்பத்திற்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் என  ஒட்டுமொத்த சமூகத்திற்கும்  பேரழப்பு” என,  கணவரான வைத்தியர் குரேஷி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மமூனா தனது பணியிடத்திலும், நண்பர்கள் மற்றும் சகாக்களின் சமூகத்திலும், அக்கம் பக்கத்திலும், எங்கள் குடும்பத்திலும் மிகவும் பிரபலமாக இருந்தாள். அவள் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்தாள். அவள் எப்போதும் வாழ்க்கையில் நிறைந்தவள், அவள் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியைப் பரப்பினாள். பிறப்பிலேயே நம்பிக்கையாளரான அவள், மனிதகுலத்திற்கு சேவை செய்யும் ஆர்வத்தால் உந்தப்பட்டாள். எங்களுக்கும் எங்கள் மகளுக்கும் அவள் பல திட்டங்களை வைத்திருந்தாள். அவளது இழப்பு ஒரு  முழுமையான உதவியற்ற நிலையை உருவாக்கி உள்ளது.”என அவர் வைத்தியர் குரேஷி   தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிப்போம், அவரிடமிருந்து ஆறுதலையும் சகிப்புத்தன்மையையும் எதிர்பார்க்கிறோம்.” என குரேஷி மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் ராணா தனது கணவருடன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். NHS  குழுமத்தில்  பணிபுரியத் தொடங்குவதற்கு முன் பைசலாபாத்தில் உள்ள பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில்   MBBS மற்றும் சிற்றி யுனிவர்சிற்றி லண்டனில்  எம்.எஸ்.சி. பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். அவர் NHS இன் வெவ்வேறு பிரிவுகளில் தனித்துவமான துறைகளில் பணியாற்றினார். ஒரு தீவிர கலைஞராக இருந்த வைத்தியர் ராணா, இஸ்லாமிய எழுத்தோவியங்களையும் வரைந்தார்.

“அவர் மிகவும் மதிக்கப்படுபவர், பெரிதும் மதிக்கப்படுபவர், தொழில்முறையில் உறுதியான மருத்துவர், தனது சக ஊழியர்களால், அவர்  பெரிதும் தவறவிடப்படுவார்.” என வைத்தியர் ராணா பணிபுரிந்த,   நோர்த் ஈஸ்ட் லண்டன் அறக்கட்டளையின் (தலைமை நிர்வாகி, பேராசிரியர் ஆலிவர் ஷான்லி ஓபி தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  “வைத்தியர் ராணா நமது சமூகத்தின் நல்வாழ்வுக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். வைத்தியர் ராணா தனது வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் வாழ்க்கைக்கு  பங்களிப்பை வழங்கினார். ” என பொது மருத்துவ கவுன்சிலின் தலைவர் டேம் கிளேர் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, May 2, 2020

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 9,623பேர் பாதிப்பு!

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 9,623பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின்
கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 124,054ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலங்களில் 53பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 1,222ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 107,819பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 15,013பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறிவந்த சிங்கப்பூர், தற்போது சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால், கொரோனா வைரஸ் தொற்று பரவலை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில், நாட்டில் நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, சில வணிகங்கள் மே 12ஆம் திகதி முதல் செயற்பட அனுமதிக்கப்படும் என நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பரந்த சமூகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்த வாரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, சில மாணவர்கள் மே 19ஆம் திகதி முதல் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களில் குறைந்த மக்களுக்கே வைரஸ் தொற்று உள்ளதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கே அதிக வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சிங்கப்பூர் சுட்டிக்காட்டியுள்ளது.

கிம் ஜொங்-உன்னுடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் (ஞாயிற்றுக்கிழமை) பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாகவும், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாகவும், சில ஊடகங்களில் மரணித்துவிட்டதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப்பதாகத் தென்கொரியா ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தொழிலாளர் நாளில் புதிய உரத்தொழிற்சாலையை அவர் திறந்து வைத்த ஒளிப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கிம், இருபது நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றி தன்மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்கு முன்னர், கிம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில் சில புலனாய்வுத் தகவலை வைத்து, கிம்மின் உடல்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கிம் ஜொங் உன் பொது வெளியில் தோன்றியுள்ளதால் அவருடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Friday, May 1, 2020

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 7,933பேர் பாதிப்பு!

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 7,933பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 114,431ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலங்களில் 96பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 1,169ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 100,042பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 13,220பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி 100,000 கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை, அரசாங்கம் விரைவில் அடையும்!

பிரிட்டனில் தினசரி 100,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் என்ற இலக்கை, அரசாங்கம் விரைவில் அடையும், அல்லது நெருங்கிவரக்கூடும் என சமூகச் செயலாளர் ரொபர்ட் ஜென்ரிக் (Communities Secretary Robert Jenrick) தெரிவித்துள்ளார்.

சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் (Health Secretary Matt Hancock) இது குறித்து தெரிவிக்கையில், நேற்று வியாழக்கிழைமையின் புள்ளிவிபரங்களை நோக்கும் பொழுது,  அரசாங்கம் விரைவில்  இந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இங்கிலாந்து முழுவதும் 81,000 சோதனைகள் நடைபெற்றுள்ளன, எனினும் இதற்கும் அதிகமான பரிசோதனைத் திறன் இருப்பதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்..

பிரிட்டன் இப்போது கொரோனா பரவலின் உச்சத்தை கடந்துவிட்டது என பிரதமர் கூறியதற்கு இது வலுச்சேர்பதாக அமைகிறது என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இன்னும் என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை, அவை இன்று மாலைவெளியிடப்படும் … ஆனால் நாங்கள் இலக்கை அடைவோம் அல்லது நெருங்கி வருவோம் என்று தெரிகிறது.” என இன்றய பிபிசி காலை நேர நிகழ்ச்சியில் ஜென்ரிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலக்கு “ஒரு படிப்படியான மைல்க் கல்லாக” இருப்பதாகவும், தேசிய ரீதியில் வலுவான சோதனை வலையமைப்பிற்கான அடித்தளங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை பிபிசி ஒன்றின் (told BBC One’s) கேள்வி நேர நிகழ்ச்சியில் அரசாங்கம் தனது இலக்கை “மிக நெருக்கமாக அல்லது சந்திக்க வாய்ப்புள்ளது” என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Transport Secretary Grant Shapps ) கூறிய பின்னர் இன்று இந்தக் கருத்துகள் வெளியாகி உள்ளன.

பிரிட்டனின் மருத்துவமனைகள் மற்றும் பரந்த சமூக அமைப்பில் கோவிட் -19 க்கு நேர்மறையான பரிசோதனையின் பின்னர் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றய புள்ளிவிபரங்களின்படி 26,771 ஆக உள்ளது, இது முந்தைய நாளில் 674 அதிகரித்துள்ளது.

எத்தியோப்பியாவிற்கு 411 மில்லியன் டொலர்கள் அவசரகால கடன் உதவி!

பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவிற்கு, 411 மில்லியன் டொலர்கள் அவசரகால கடன் உதவி வழங்க, சர்வதேச நிதியம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை சுமார் 12 மில்லியன் டொலர் நிதிக்கு, கடன் சேவை கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எத்தியோப்பியாவின் கோரிக்கையையும் அங்கீகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக எத்தியோப்பியா, இந்த தொகையினை செலவிடவுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் தொற்றுக்கு, இதுவரை 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3பேர் உயிரிழந்துள்ளனர். 59பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீடிக்க ஜப்பான் முடிவு?

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜப்பான், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு, மே 7ஆம் திகதி இயல்பு நிலைக்கு வருவது கடினமானது. வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும்.

ஊரடங்கை நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாகாண அரசுகளும் இதற்கு தயாராக வேண்டும். ஊரடங்கை நீடிப்பது குறித்து 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும்’ என கூறினார்.

கடந்த, ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீடித்து ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டது.

ஜப்பானின் பயணத் தடை உத்தரவின் மூலம், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நுழைவுத் தடை பெற்ற மொத்த நாடுகளின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை 87 ஆகும்.

ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால், 14,088பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2460பேர் மீண்டுள்ளனர். மேலும், 430பேர் உயிரிழந்துள்ளனர்.

Friday, April 24, 2020

கட்டாரில் ஒரேநாளில் 761பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கட்டாரில், ஒரேநாளில் 761பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து, கட்டாரில் மிகப்பெரிய தினசரி அதிகரிப்பு இதுவென சுகாதார அமைச்சகம் விபரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 8,525பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,706பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 10பேர் உயிரிழந்துள்ளனர். 72பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 809பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ரஷ்யாவில் 1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை வார இறுதிக்குள் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) ரஷ்யாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையொன்றை வார இறுதிக்குள் திறக்க, சுகாதார அமைச்சகம் எதிர்பார்த்துள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இந்த வார இறுதிக்குள் நகரின் லெனெக்ஸ்போ கண்காட்சி மையத்தில் இந்த தற்காலிக மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி 2,700 கொரோனா வைரஸ் தொற்றுகளும் 20 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக 70,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும் 615 இறப்புகளும் உள்ளன.

ரஷ்யாவின் சுகாதார அமைப்பு தொற்று பரவலை சமாளிக்க உதவுவதற்காக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உட்பட, கொரோனா வைரஸ் தொற்று குறித்து தங்கள் கவனத்தைத் திருப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 16 புத்தம் புதிய மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறது, இதில் மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்குப் பகுதிகள் மற்றும் வோல்கா நதிப் பகுதிகள், சைபீரியா மற்றும் தூர கிழக்கு நாடுகளும் அடங்கும்.

புதிய மருத்துவமனைகள் எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் முழுமையாக தயாராக இருக்கும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

பிரிட்டனில் மேலும் 761 பேரின் மரணங்கள் பதிவாகின – மொத்த இறப்புகள் 19,499.

பிரிட்டனில் கொரோனா வைரஸால் மேலும் 761 பேர் இறந்துள்ளனர், இந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 19,499 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் 587 பேர் இறந்ததாக NHS உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் 174 இறப்புகள் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்கள் 40 முதல் 102 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களில் 34 பேருக்கு அடிப்படை ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் எதுவும் இருந்ததாக பதிவுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

761 புதிய இறப்புகள் நேற்றைய 616 ஐ விட 24% உயர்வைக் காட்டுகின்றது. இருப்பினும் இன்றைய புள்ளிவிவரங்கள் பூர்வாங்கமானவை என சுகாதாரத் துறையால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

COVID-19 க்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் ஸ்காட்லாந்தில் மொத்தம் 1,184 நோயாளிகள் இறந்துள்ளனர், இது வியாழக்கிழமை 1,120 ஆக இருந்து 64 ஆல் அதிகரித்துள்ளது.

Monday, April 20, 2020

கொரோனா – கடந்த ஒருவாரகாலத்தில் பிரிட்டனின் இறப்புக் குறைந்த 24 மணித்தியாலம் பதிவாகியது….

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் பதிவாகி உள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்கள் 16,060 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இனம்காணப்பட்ட +5,850 பேருடன், பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 120,067 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த பல நாட்களில் நிலவிய உச்ச மரணங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மரணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட முடக்க நிலைக் கட்டுப்பாடுகள், தற்போது பயனளிக்க தொடங்கியிருக்கலாம் எனவும், அதுவே இந்தக் குறைவிற்கு காணம் எனவும், நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மாறாக எதிர் வரும் மாதங்களில்  பிரிட்டனின் முடக்க நிலை தளர்த்தப்படுமாயின் கொரோனா வைரஸின் பேரலைத் தாக்கத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7