இந்தநிலையில், நாட்டில் நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, சில வணிகங்கள் மே 12ஆம் திகதி முதல் செயற்பட அனுமதிக்கப்படும் என நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பரந்த சமூகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்த வாரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, சில மாணவர்கள் மே 19ஆம் திகதி முதல் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது.
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களில் குறைந்த மக்களுக்கே வைரஸ் தொற்று உள்ளதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கே அதிக வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சிங்கப்பூர் சுட்டிக்காட்டியுள்ளது.