LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Showing posts with label கனடா. Show all posts
Showing posts with label கனடா. Show all posts

Thursday, December 17, 2020

கொரோனா தொற்று – கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை மூடப்படுகின்றது!


 கொரோனா தொற்று காரணமாக கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உலகின் மிக நீளமான சர்வதேச எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.


கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலை குறைக்க மார்ச் மாதத்தில் எல்லை ஆரம்பத்தில் மூடப்பட்டது.


அதன் பின்னர் மாதந்தோறும் மூடல் புதுப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருள் வர்த்தகம் மற்றும் அவசரகால பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


இதேவேளை, அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையிலான எல்லையும் ஜனவரி 21 வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!


 கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 04 இலட்சத்து 75 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 06 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர்.


அங்கு மொத்தமாக இதுவரை 13 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 3, 2020

கொவிட்-19 தடுப்பூசி: ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை!


கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி குறித்து, ஒன்றாரியோவுக்கு விரைவில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பதில்கள் தேவை என டக் ஃபோர்ட் வலியுறுத்தினார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘தடுப்பூசிகள் எப்போது வரும், அவற்றில் எத்தனை பெறப் போகிறது, அவை எந்த வகையான தடுப்பூசிகள் என்று தனக்கு இன்னும் தெரியாது.

நாங்கள் நாளை தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பதை கடைசி நிமிடத்தில் நாம் கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் அந்த மூன்று பதில்களையும் சொல்ல மத்திய அரசாங்கத்திடம் கேட்கிறோம். நீங்கள் எனக்கு ஒரு விநியோகத் திகதியை கொடுக்க முடியாது? இல்லை, இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என கூறினார்.


 

Tuesday, October 20, 2020

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,827பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு!


 கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 827பேர் பாதிக்கப்பட்டதோடு, 14பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 760பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 21ஆயிரத்து 276பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 67ஆயிரத்து 112பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 188பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கு கட்டுப்பாடுகள்!


 ஒன்றாரியோ தெற்கில் நகரத்திற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதிலிருந்து தடுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவின் ஸ்ட்ராட்போர்டில் நான்கு உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் வைத்திருக்கும் ராம்ஷாகில் இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்தில் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டபோது இந்தக் கொள்கையை முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த கோடையில் தொற்றுநோய் குறைந்து வருவதால் மெதுவாக அதைத் திரும்பப் பெற்றது.

இப்போது கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ரொறன்ரோ, யோர்க் மற்றும் பீல் பிராந்தியங்கள் மற்றும் ஒட்டாவாவில் மாகாணம் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாக ராம்ஷாகில் உரிமையாளர் ஜெஸ்ஸி வோட்டரி கூறினார்

கனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொவிட்-19 சோதனை!


 கனடாவில் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 17ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, பல மில்லியன் கனேடியர்கள் சுவாச நோயை சரிபார்க்க உள்ளூர் சுகாதார மையங்களுக்கு சென்றுள்ளனர்.

இதில், பரிசோதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 196,321 பேர் சாதகமான முடிவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்தமாக 2.2 சதவீதம் நேர்மறையானது என தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 760பேர் உயிரிழந்துள்ளனர்.

Sunday, October 18, 2020

ஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டம்: கனடாவுக்கு சீனா எச்சரிக்கை!


 ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு எச்சரித்தார்.

ஹொங்கொங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு கூறுகையில்,

“தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்கள் வன்முறை குற்றவாளிகள்.

எனவே கனடா தரப்பு உண்மையில் ஹொங்கொங்கில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருந்தால், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனடா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் நல்ல ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஹொங்கொங்கில் இயங்கும் கனடா நிறுவனங்களின் எண்ணிக்கையில் அக்கறை இருந்தால், வன்முறைக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அந்த முயற்சிகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என கூறினார்.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், காங்கின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குழப்பமானது என கூறினார்

வின்னிபெக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!


 கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், வின்னிபெக்கில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மறு மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன் இரண்டு வாரங்கள் தொடரும்.

இதுகுறித்து தலைமை மாகாண பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின் கூறுகையில், ‘வீட்டு உறுப்பினர்களைத் தவிர, உங்கள் வீட்டில் இன்னும் ஐந்து பேரை மட்டுமே வைத்திருக்க முடியும் ஐந்து அல்லது அதற்கும் குறைவான மேசைகள் மட்டுமே உணவகங்களில் அனுமதிக்கப்படும்.

அடுத்து அனைத்து குளிர்பான அறைகள், பொழுதுபோக்கு வசதிகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பிங்கோ அரங்குகள் மூடப்படும்.

கூடுதலாக, உணவகங்கள் மற்றும் சில்லறை கடைகள் 50 சதவீதம் திறனில் மட்டுமே செயற்பட அனுமதிக்கப்படும்.

தேவைப்படும் போது அபராதம் விதிக்கப்படலாம். எதிர்வவரும் வாரங்களில் அமுலாக்க முயற்சிகளை விரைவுபடுத்துவது குறித்து மாகாணம் ஆராயும்’ என கூறினார்.

சீனாவின் எச்சரிக்கைக்கு கனடா பதில்!


 சீனாவின் மனித உரிமைகளை கனடா தொடர்ந்து பாதுகாக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளுக்காக நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் எழுந்து நிற்போம் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கான சீனாவின் தூதுவர் காங் பீவு கடந்த வியாழக்கிழமை கனடாவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ஹொங்கொங் செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் வழங்குவதை எதிர்த்தும், இதனால் கோட்பாட்டளவில் தன்னாட்சி பெற்ற சீனப் பிரதேசத்தில் வாழும் மூன்று இலட்சம் கனேடியர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டியும் அவர் கனடாவை எச்சரித்தார்.

கனடாவின் தி குளோப் அன்ட் மெயில் நாளேடு,  ஒட்டாவா சமீபத்தில் ஒரு ஹொங்கொங் தம்பதியினருக்கு புகலிடம் அளித்ததாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விடயத்தை கனேடிய அரசாங்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லையென்ற பின்னணியில் சீனா இந்த எச்சரிக்கையை விடுத்தது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின், சீனத் தூதுவரின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைய சீனாவின் ஹூவாவி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை கனடா கைதுசெய்த நிலையில் 2018 டிசம்பரில் இருந்து சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 4, 2020

கனடாவில் கொரோனா தொற்றினால் 164,471 பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அங்கு கியூபெக் மாநிலத்திலேயே இதுவரை அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்கு இதுவரை 77,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 5,867 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு ஒன்ராறியோவில் 53,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,968 பேர் உயிரிழந்துள்ளனர். ஆல்பேர்ட்டாவில் 18,357 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 9,381 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

Saturday, October 3, 2020

கொவிட்-19: கனடாவில் ஜூன் மாத ஆரம்பத்திற்கு நாளொன்றுக்கான உயிரிழப்பு அதிகரிப்பு!

கனடாவில் ஜூன் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூன் 4ஆம் திகதி 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு, தற்போதுதான் நாளொன்றுக்கான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 62ஆயிரத்து 659பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 409பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 15ஆயிரத்து 636பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 614பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 126பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நோவா ஸ்கோடியா மாகாண அவசரகால நிலை நீடிப்பு!

நோவா ஸ்கோடியாவில் நடைமுறையில் உள்ள மாகாண அவசரகால நிலை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் மார்ச் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்ட மாகாண அவசரகால நிலை, தற்போது கொவிட்-19 தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோடியா அரசாங்கம், ஒரு புதிய இணையக் கொவிட்-19 மதிப்பீட்டுக் கருவியை அறிவித்துள்ளது.
கொவிட்-19க்கு சாதகமாக சோதிக்கும் எவரும், 14 நாட்கள், பொதுமக்களிடமிருந்து விலகி, வீட்டிலேயே சுயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அட்லாண்டிக் பிராந்தியத்திற்கு வெளியில் இருந்து நோவா நோவா ஸ்கோடியாவுக்குச் செல்லும் எவரும் 14 நாட்களுக்கு சுயமாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும், மாகாணத்திற்கு வருவதற்கு முன்பு சுய அறிவிப்பு படிவத்தை நிரப்ப வேண்டும்.
எவ்வாறாயினும், மாகாணத்திற்கு வெளியே சுழற்சி செய்யும் தொழிலாளர்களுக்கு சில சுயத்தனிமை விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாகாணம் தளர்த்தியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது ஒன்றாரியோ மாகாணம்!

ஒன்றாரியோ சமூக வட்டாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உயர்ந்து வருவதால், முழு மாகாணத்திலிருந்தும் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு மாகாண அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் இன்று (சனிக்கிழமை) முதல் ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகள் திறனை 100ஆகக் கட்டுப்படுத்த வேண்டும். ரொறன்ரோ பொது சுகாதாரம் ஏற்கனவே திறனை 75ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இப்போது ஒரு சாப்பாட்டு மேசைக்கு அதிகபட்சம் ஆறு பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் தொடர்புத் தகவலும் தொடர்புத் தடமறிந்து சேகரிக்கப்பட வேண்டும்.
மூன்று தொற்றுநோய் பரவும் பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி மற்றும் உடல்கட்டுக்கோப்பு மையங்களுக்கு, குழு உடற்பயிற்சி வகுப்புகள் இப்போது 10பேர் என மட்டுப்படுத்தப்படும்.
விருந்து அரங்குகள் மற்றும் நிகழ்வு இடங்கள் ஒரு சாப்பாட்டு மேசைக்கு ஆறு பேரைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
ஒன்றாரியோ அடுத்த 28 நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளது. வணிகங்கள், வசதிகள் மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட உட்புற பொது அமைப்புகளுக்கான மாகாண அளவிலான கட்டாய முகக்கவசம் உத்தரவையும் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

Friday, October 2, 2020

கொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 60ஆயிரத்து 535பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 777பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 22பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 319பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 14ஆயிரத்து 866பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 350பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா அல்லாத பன்னாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீடிப்பு!

அமெரிக்கா அல்லாத பன்னாட்டுப் பயணங்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை தவிர வேறு நாட்டிலிருந்து கனடாவுக்குள் நுழையும் எவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.
கனடாவுக்குள் நுழையும் இந்த பன்னாட்டுப் பயணிகள் அனைவரும் வந்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அவர்கள் தனிமைப்படுத்தலை அமுல்படுத்துவதற்கான தொடர்பு தகவல்களை வழங்கவும், எல்லை அதிகாரியால் சோதனை திரையிடப்படவும் வேண்டும்.
கூடுதலாக, பல பயணிகள் தற்போது அத்தியாவசிய காரணங்களுக்காக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த மொத்த தடைக்கான விதிவிலக்குகளில் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களின் உடனடி குடும்பங்கள், பன்னாட்டு மாணவர்கள், அத்தியாவசிய தொழிலாளர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
கனடா-அமெரிக்க எல்லை ஒக்டோபர் 21ஆம் திகதி வரை விருப்பப்படி பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மூத்த அரசாங்க வட்டாரங்கள் எல்லை கட்டுப்பாடுகளை குறைந்தபட்சம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க முடியும் என்று கூறியுள்ளன.

பாடசாலைகள்- குழந்தை பராமரிப்பு மையங்களுக்கான கொவிட்-19 சோதனை நெறிமுறைகளில் மாற்றம்!

பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கான கொவிட்-19 சோதனை நெறிமுறைகளில் மாகாணம் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
காய்ச்சல் மற்றும் சளி, இருமல், மூச்சுத் திணறல், குறைதல் அல்லது வாசனை இழப்பு அல்லது சுவை தெரியாமை, மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, குமட்டல், சோர்வு ஆகியவை குறைந்த அடுக்கு அறிகுறிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கொவிட்-19 இன் குறைவான பொதுவான அறிகுறிகளைப் புகாரளிக்கும் மாணவர்கள், அவர்களின் நிலை மேம்படத் தொடங்கும் வரை 24 மணிநேரம் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டும்.
இருப்பினும், அவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரண்டாம் நிலை அறிகுறிகள் இருந்தால், ஒரு மருத்துவரிடமிருந்து மாற்று நோயறிதல் அல்லது எதிர்மறை பரிசோதனை மூலம் கொவிட்-19 இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
அறிகுறிப் பட்டியலில் இருந்து வயிற்று வலி மற்றும் இளஞ்சிவப்பு கண் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.

நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்

கொவிட்-19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள சில நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் என்பது ஊழியர்கள், அத்தியாவசிய பார்வையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படுவார்கள்.
இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட் மேலும் கூறுகையில், ‘இந்த புதிய அலைகளில் நாம் காணும்போது, எங்கள் மூத்தவர்களைப் பாதுகாக்க எங்கள் அரசாங்கம் தொடர்ந்து கடுமையான ஆனால், தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். நாங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளைப் பார்க்கிறோம். அதிக சமூக கூட்டம் உள்ள பகுதிகள் பரவுகின்றன. என் நண்பர்களே, இது நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒன்றல்ல. கொவிட்-19ஐ அனுமதிக்க முடியாது’ என கூறினார்.
எதிர்கால பராமரிப்பு மற்றும் கொவிட்-19 அலைகளிலிருந்து நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க 540 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக ஒன்றாரியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Thursday, October 1, 2020

எதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு!

எதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதன்மூலம் கனேடியர்கள் சில நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய புதிய சோதனையை அணுக முடியும் என்று அவர் கூறினார்.
பொது சுகாதார நெருக்கடியின் முன் வரிசையில் இந்த புதிய சாதனங்களைக் காண எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து கன்சர்வேடிவ் சுகாதார விமர்சகர் மைக்கேல் ரெம்பல் கார்னரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த கருத்தினை ட்ரூடோ வெளியிட்டார்.
கனேடியர்களுக்கு உதவ ‘அபோட் ஐடி நவ்’ விரைவான சோதனை நிறுத்தப்படும் எனவும் விரைவான சோதனை மூலம் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் ட்ரூடோ கூறினார்.
மேலும், தொற்றுநோய் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் புதிய விரைவான சோதனைகள் மாகாணங்களுக்கு அனுப்பப்படும் எனவும் இது மேலும் அதிக பின்னடைவுகளைத் தவிர்க்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கொவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்த வேண்டிய சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான இடைக்கால உத்தரவின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Monday, September 7, 2020

கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 371பேர் பாதிப்பு- 2பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 371பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 495பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 143பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறாயிரத்து 216பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 16ஆயிராயிரத்து 136பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 54பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இலையுதிர் காலம் புதிய அபாயங்களைக் கொண்டு வரும்: தலைமை பொது சுகாதார அதிகாரி எச்சரிக்கை

எதிர்வரும் இலையுதிர் காலம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களில் புதிய அபாயங்களைக் கொண்டு வரும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோடைகாலத்தின் இறுதி நீண்ட வார இறுதியில், தங்கள் சொந்த ஆபத்து காரணிகளையும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்தவொரு நேரில் கூடிய கூட்டங்களுக்கான திட்டங்களின் விபரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒட்டாவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே டாக்டர் தெரேசா டாம் இந்த கருத்தினை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உங்களுடன் இருப்பவர்களை அறிவது சுவாச நோயை ஏற்படுத்தும் வைரஸைத் தொற்றுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.

கொரோனா வைரஸை கையாண்ட பல மாதங்களுக்குப் பிறகு அரசாங்க நிறுவனங்கள், முதலாளிகள் மற்றும் தனிநபர்கள் இப்போது கொவிட்-19 தொற்றை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.

எனவே கனேடியர்கள் எதிர்கொள்ளும் நிலைமை வசந்த காலத்தில் நோய் பரவலாக பரவத் தொடங்கிய காலத்திலிருந்து வேறுபட்டது” என கூறினார்.
 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7