எதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதன்மூலம் கனேடியர்கள் சில நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய புதிய சோதனையை அணுக முடியும் என்று அவர் கூறினார்.
பொது சுகாதார நெருக்கடியின் முன் வரிசையில் இந்த புதிய சாதனங்களைக் காண எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து கன்சர்வேடிவ் சுகாதார விமர்சகர் மைக்கேல் ரெம்பல் கார்னரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த கருத்தினை ட்ரூடோ வெளியிட்டார்.
கனேடியர்களுக்கு உதவ ‘அபோட் ஐடி நவ்’ விரைவான சோதனை நிறுத்தப்படும் எனவும் விரைவான சோதனை மூலம் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் ட்ரூடோ கூறினார்.
மேலும், தொற்றுநோய் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் புதிய விரைவான சோதனைகள் மாகாணங்களுக்கு அனுப்பப்படும் எனவும் இது மேலும் அதிக பின்னடைவுகளைத் தவிர்க்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கொவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்த வேண்டிய சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான இடைக்கால உத்தரவின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது.