LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, January 6, 2021

இன்று கவிஞர் பிரமிள் நினைவு தினம்.


இன்று கவிஞர் பிரமிள்

நினைவு தினம்.

06-01-2021.

அவர் நினைவாக இன்று தமிழ்நாட்டில்

திருநெல்வேலியில் திறக்கப்படும்

#பிரமிள்நினைவுநூலகம் தொடர்பான தகவலை பதிவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரமிள் தனி மனிதனல்ல அவர் ஓர் இலக்கிய இயக்கமாகவே வாழ்ந்தவர் என்பதற்கான அடையாளங்கள் இவை.

பிரமிள் நூலகம் தொடர்பாக நண்பர் #மயன்ரமேஷ்ராஜா அவர்களின் பிரமிள் நூலகம்

முக நூல் பதிவில் இருந்து.... 


திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளம் அருகில் அமைந்துள்ள திருமால் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பிரமிள் நூலகம்' அந்நகர மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களுக்கும் பயன்படுமாறு கவிஞர் பிரமிளின் நினைவு நாளான  ஜனவரி மாதம் ஆறாம் தேதி (06.01.2021) புதன்கிழமை காலை 10 மணிக்கு எழுத்தாளர் கால சுப்ரமணியம் அவர்களால் திறக்கப்பட உள்ளது.


கவிஞர் பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி இலங்கையிலுள்ள திருகோணமலையில் பிறந்தார். எழுபதுகளில் தமிழகத்திற்கு வந்த பிரமிள் “எழுத்து” பத்திரிகையில் தொடங்கி அதன் பின்னர் பல சிறுபத்திரிகைகளில் தன் எழுத்துகள் மூலமாக தமிழ்ச் சிந்தனை மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.


கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், விமர்சனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிற்பம் என எல்லா துறைகளிலும் மேதமை கொண்ட பிரமிள் படைப்புகள் உலகத்தரம் வாய்ந்தவை. இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த சனாதன தர்மத்தை எவ்வகை தயவு தாட்சண்யம் இன்றி அடித்து வீழ்த்தியவர் பிரமிள்!

பிரமிள் என்கிற படைப்பாளி, விமர்சகர் தோன்றவில்லை என்றால் தமிழ் இலக்கிய உலகம் என்றோ அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும்.


இன்று தமிழிலக்கியத்தில் சரியான படைப்புகளை தருபவர்களாகவும் சாதிமத அழிவுச் சூழலில் சிக்காமல் அற்புதமாக வாழ்பவர்களும் பெரும்பாலும் பிரமிளின் பார்வையை தன்னகத்தே கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்!


வெகுஜன உலகில் அறியப்படாத அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு மேதையின் பெயரைத் தவிர வேறு யார் பெயரை இந்த நூலகத்திற்கு சூட்டுவது ?

'பிரமிள் நூலகம்' நூலகம் மட்டுமல்ல அது ஒரு இயக்கம். தொடர்ந்து தமிழ் படைப்பாக்கத்தை மறுமலர்ச்சிக்கு எடுத்துச் செல்வதும் தலைசிறந்த மனித வாழ்வை சிருஷ்டிக்கவும் இந்நூலகம் தன் அளப்பரிய பங்கை ஆற்றும்.


- மயன் ரமேஷ் ராஜா

பிரமிள் நூலகம்

கைப்பேசி :99429 77800



 

Sunday, July 12, 2020

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில்  அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்கள், உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழைப் பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் – மோடி

கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும் தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (சனிக்கிழமை) காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தலைநகர் டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய,  மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த என்.சி.ஆர் பகுதியிலும் தொற்று நோயை கட்டுப்படுத்த மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து இதேபோன்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலோசனைக் கூட்டத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,  நிதி ஆயோக் உறுப்பினர்,  அமைச்சரவை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரேநாளில் நான்காயிரம் பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளன.
இதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 76 ஆயிரத்து 158 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் மரணித்துள்ளனர்.
சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக 2 ஆயிரத்து 780 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், மூவாயிரத்து 591 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை,இன்று 37 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Monday, June 1, 2020

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக அதிகரிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை மண்டல வாரியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 2589 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார
மேலும் இதற்காக புது உத்திகள் கையாளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று வானொலியொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சில பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்து வருகிறது.
பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காக்க அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெட்டுக்கிளித் தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய உயிரினம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது என்றும் இந்த தாக்குதல் இன்னும் சில நாட்கள் நீடித்து, அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள் மற்றும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில,; இந்த ஆண்டு அதன் பரவல் அதிகமாக உள்ளது.
மேலும், இந்த வெட்டுக்கிளிகள் பல முதிராத இளம் பருவத்தில் இருப்பதால் அவை பயிர்களை அழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
வெட்டுக் கிளிகள் முட்டை இடுவது அதிகரித்திருப்பதால், இன்னும் இரண்டு மாத காலத்திற்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து பாதிப்பும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, May 29, 2020

மக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் – பழனிசாமி

பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனைகளை மேற்கொண்ட அவர்  செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாநிலம்,  வெளி நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களால் தொற்று அதிகரித்துள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினால் தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. சிறப்பான சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மருந்துகள்,  மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணைப்  பிறப்பித்துள்ளது.
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவுடன் 14 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.தொழில் துறையினருக்கு அளிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள்,  செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் துருக்கியை பின் தள்ளியது இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியை பின்தள்ளி  இந்தியா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளிய  இந்தியா கடந்த திங்கள் அன்று 10வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலைவரப்படி 1 இலட்சத்து 67 ஆயிரத்து 250 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதன்படி  இன்று  புதிதாக 1864   பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 86  பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில்,  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4797  ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 71   ஆயிரத்து 369   பேர் சிகிச்சைகளுக்குப் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 91  ஆயிரத்து 084 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானம்!

சுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமுல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக  பள்ளி கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது 100 நாட்களில் 600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 27, 2020

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள், ஜூன் 1ஆம் திகதி முதல் தொழிலுக்குச் செல்ல முடியுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் மீன்வளத்துறை கடந்த மார்ச் 20 ஆம் திகதி வெளியிட்ட ஆணையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜுலை 31 வரை 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்கத் தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தையும் மீன்பிடி தடைகாலமாக கணக்கில் கொண்டு, மீன்பிடி தடை காலத்தினை மாற்றி அமைத்து ஆணை வழங்குமாறு மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கு, தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. வேறு சில மாநிலங்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அந்தவகையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மீன்வளத்துறை, மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைத்துள்ளது.
அதாவது, இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூன் 31 வரை 47 நாட்களுக்கும், தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடித் தடைகாலம் அமுல்படுத்தப்படுமென திருத்திய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா நோய்கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1 ஆம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
அதேபோன்று மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு மீனவர்கள், ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். இதனூடாக தமிழ்நாட்டின் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவார்கள்” என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக 17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார்.
குறித்த நிறுவனங்களுடன் 15,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சரிவை சந்தித்துள்ள தொழில்துறையை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போதைய சூழலில் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட 17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று கையெழுத்தானது.
இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுள்ளது.
17 திட்டங்களின் விபரம்:
திட்டம் – 01
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும வகையில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த Daimler india commercial vehicles நிறுவனத்தின் கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.
திட்டம் – 02
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின் கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்.
திட்டம் – 03
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த polymatech electronics நிறுவனத்தின் Semiconductor chips உற்பத்தி திட்டம்.
திட்டம் – 04
350 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த chung jye company limited மற்றும் aston shoes pvt ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் காலணிகள் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 05
காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 5,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த  lai investment private limited நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டம்.
திட்டம் – 06
காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த mando automotive india private limited  நிறுவனத்தின் casting facility திட்டம்.
திட்டம் – 07
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில்,சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த dinex  நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 08
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய இங்கிலாந்து கூட்டு Chennai power generation limited நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.
திட்டம் – 09
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த IGL india transplantation solution pvt ltd நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் இரசாயன உற்பத்தி திட்டம்.
திட்டம் – 10
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தvivid solaire energy private limited   நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.
திட்டம் – 11
சென்னை, அம்பத்தூரில் 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த  HDCI data holdings Chennai LLP நிறுவனத்தின் தகவல் தரவு மையம் திட்டம்.
திட்டம் – 12
சென்னையில் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ST tele media நிறுவனத்தின் தகவல் தரவு மைய திட்டம்.
திட்டம் -13
சென்னையில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த baettr நிறுவனத்தின் காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி wind mill components திட்டம்.
திட்டம் – 14
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில் 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்
வகையில் சீன நாட்டைச் சேர்ந்த BYD india private limited நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம்.
திட்டம் – 15
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள  Mahindra origins தொழிற்பூங்காவில் 46 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த TJR precision technology company limited நிறுவனத்தின்precision components உற்பத்தி திட்டம்.
திட்டம் – 16
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் 15 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  pillar industries india private limited நிறுவனத்தின் sealing materials உற்பத்தி திட்டம்.
திட்டம் – 17
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 12 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த Lincoln electric நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் துவங்கும் திட்டம்.

இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,  சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கொரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
அதற்கமைய ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற பெயர்களை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர்.
இது தொடர்பாகக் கூறும்போது, ‘இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர் ஆகியவை கொரோனா வைரஸுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் இரண்டு முக்கிய விடயங்களாகும்.
அதனால்தான் இந்த ஆண்குழந்தைகளுக்கு இந்தப் பெயரையே சூட்டியுள்ளோம்’. டெலிவரிக்கு முன்னதாக எனக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது’ என்று தாயார் வேணு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தாரிடம் தெரிவித்தார்.

Sunday, May 24, 2020

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தமிழகத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும்.
இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வட மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது“ என்றுள்ளார்.

1Share

போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எனது தலையை துண்டித்து விடுங்கள் – மம்தா ஆவேசம்

ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என மேற்கு வங்காள மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில்  கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறும்போது, “புயல் தாக்கி 2 நாட்கள் ஆகி உள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நாங்கள் அனைவரும் இரவு- பகல் பாராமல் இதற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா பணிகளும் விரைவில் முடிந்து விடும். இதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
அதையும் மீறி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Tuesday, May 19, 2020

பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!

கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்டுள்ள நிலையில், பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என பிறத்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய உட்துறையின் செயலாளர் அஜெய் பல்லா வெளியிட்ட உத்தரவில் “மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் திகதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  41 சிறுதொழில் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை கடந்த 15-ம் திகதி விசாரித்த நீதிபதிகள்   “சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் அடுத்த வாரத்துக்குள் தராத நிலை ஏற்பட்டால்கூட அந்த நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் எடுக்கக்கூடாது. சிறு நிறுவனங்கள் போதுமான வருவாய் ஈட்டாத நிலையில் அவர்களால் ஊதியம் வழங்க இயலாது.
பெரும்பாலான சிறு நிறுவனங்கள் உற்பத்தி இல்லாமல் 15 நாட்கள் வரை மட்டுமே தாங்கும் சக்தியுள்ளதாக இருக்கின்றன.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மத்திய அரசு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப்போல் நடத்துகிறது – சந்திரசேகர ராவ்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள்போல் நடத்துவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். சுயச்சார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசுகளின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம்.
நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறீர்கள். மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். இந்தியாவில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் முறை இதுதானா?
கூட்டாட்சி முறையில் மத்திய அரசு அறிவித்த இதுபோன்ற பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற முடியாது. இப்படி நீங்கள் அறிவித்தால் மாநில அரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றன. உங்களுக்குக் கீழ் இயங்கவில்லை.
கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயற்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Monday, May 18, 2020

மீண்டுவருகிறது தமிழகம்: ஒரேநாளில் ஆயிரம் பேர்வரை குணமடைந்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது சற்று பாதிப்பு குறைவடைந்துள்ளது.
இதுவேளை, இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 939 பேர் குணமடைந்த குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 384 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 93 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பரவியவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடுகளுக்கு்த திரும்பியுள்ளனர்.
இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.
இ்வவாறு கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை மற்றும் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளமை தமிழக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 91 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 2,872 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் 53,946 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 9,33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 34,108 போ் குணமடைந்துள்ளனா்.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 30,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 7,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து குஜராத்தில் 10,988 பேரும் தமிழ்நாட்டில் 10,585 பேரும் டெல்லியில் 9,333 பேரும் ராஜஸ்தானில் 4,960 பேரும் ஆந்திராவில் 2,355 பேரும் தெலுங்கானாவில் 1,509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 80% கொரோனா தொற்று பாதிப்பு 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது.
 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7