LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 16, 2019

தாழ்ச்சி:

“குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்| அவ்வாறாயின் கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.
நீ பெரியவனாய் இருக்குமளவுக்கு பணிந்து நட| அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.
(உயர்ந்தோர், புகழ் பெற்றோர் பலர் இருக்கின்றனர்| ஆனால் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.”

தாழ்ச்சி தாழ்வைக் குறிப்பதில்லை. அது பணிவைக் குறிக்கிறது. தன்னைத் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான் என்ற இறைவாக்கு மரியாள் மட்டில் எவ்வளவு நிஜமானது என்பதை நாம் கண்டு கொள்கின்றோம். தன்னை ஆண்டவரின் அடிமையென்று தன்னை அவள் தாழ்த்திக் கொண்டதால் முழு உலகத்திற்குமே அவள் அரசியாக உயர்த்தப்படுகின்றதை நாம் காண்கின்றோம். தனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டமடித்துக் கொள்கின்றவன், உண்மையில் எல்லாம் அறிந்தவர் முன் ஒரு நாள் சிறுமைப்பட்டுப் போகின்றான்.
ஒன்றைச் சரியாக அறிந்து கொள்ள முனைபவன் முதலில் அந்த விடயம் குறித்துத் தனக்கு எதுவுமே தெரியாது என்கின்ற நிலைக்குத் தன் மனதில் தாழ்ச்சி கொண்;டு தனது மனதை வெறுமையாக்கிக் கொள்ளாத வரை அவனால் தான் கற்க விரும்பும் விடயத்தை முழுமையாகக் கற்க முடியாது. தனக்கு எதுவுமே தெரியாது என்று தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பவன், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தான் அறிந்திருப்பதை வெளிப்படத்தும்போது சிறப்படையவே செய்வான்.”

பதினோராம் நிலை
இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்; .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“எனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன பொல்லதவர்களின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது, என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
“என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், என் உடையின் மீது சீட்டுப் போடுகிறார்கள்.”
(சங். 21 : 16, 18)

எரிகின்ற வீட்டில் பிடுங்கினது வரை இலாபம் எனச் சொத்துச் சேர்க்கும் மனிதர் இந்த உலகில். வீட்டில் கட்டை உயிர் விட கடைசி மூச்சு இழுக்கும்போது சொத்துக்குச் சிண்டு பிடிக்கும் உறவுப் பிசாசுகள்.
நல்லது செய்வதற்கும் நாலு பணம் கறக்கின்ற உத்தியோகப் பிச்சைக்காரர்கள். ஏழை வயிறானாலும் அடித்துப் பறிப்பதிலே விட்டுக் கொடாத இலஞ்சப் பேய்கள். மருந்து செய்ய ஏங்கும்போது தனியார் மருத்துவமனைச் சேவகம். காசில்லையேல் நல்ல கவனிப்பில்லை. படிக்கவென்று சேரப் போனால் அங்கும் பெருந்தொகைத் தண்டம்!
குறுக்கு வழிப் பணத்திலின்று ஆசை கொண்ட மனித மனங்கள் இங்கே நிறைய! மனித நேயங்களைத்தான் அங்கே காணமுடியவில்லை.
மண்ணில் நிறைந்துவிட்ட அக்கிரமங்கள், மனித மனங்களிலே விளைந்து ஆணிகளாகக் காய்த்து நிற்கின்றன.
ஒரு இயேசு இங்கே போதாது, ஓராயிரம் இயேசுவும் போதாது! ஆணிகள்தான் நாளும் இங்கே அறுவடையாகின்றனவே. பாவங்கள் மீது அவை உரசி உரசிக் கூர்மையாகின்றன.
சிந்திப்போம்:
உள்ளதைக் கொண்டு மனநிறைவைக் காணும் மனதைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!

அடுத்தவன் வாழ்வு கண்டு என் வாழ்வை மாற்றி கஷ்டப்படாத உறுதியை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!

பணத்திற்கு வாழ்வில் முதலிடம் தர மறுத்து, மனித நேயத்தை நாடும் இதயத்தை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,

எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்! 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7