LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 6, 2021

இன்று கவிஞர் பிரமிள் நினைவு தினம்.


இன்று கவிஞர் பிரமிள்

நினைவு தினம்.

06-01-2021.

அவர் நினைவாக இன்று தமிழ்நாட்டில்

திருநெல்வேலியில் திறக்கப்படும்

#பிரமிள்நினைவுநூலகம் தொடர்பான தகவலை பதிவது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரமிள் தனி மனிதனல்ல அவர் ஓர் இலக்கிய இயக்கமாகவே வாழ்ந்தவர் என்பதற்கான அடையாளங்கள் இவை.

பிரமிள் நூலகம் தொடர்பாக நண்பர் #மயன்ரமேஷ்ராஜா அவர்களின் பிரமிள் நூலகம்

முக நூல் பதிவில் இருந்து.... 


திருநெல்வேலி, பேட்டை, திருப்பணிகரிசல்குளம் அருகில் அமைந்துள்ள திருமால் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பிரமிள் நூலகம்' அந்நகர மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களுக்கும் பயன்படுமாறு கவிஞர் பிரமிளின் நினைவு நாளான  ஜனவரி மாதம் ஆறாம் தேதி (06.01.2021) புதன்கிழமை காலை 10 மணிக்கு எழுத்தாளர் கால சுப்ரமணியம் அவர்களால் திறக்கப்பட உள்ளது.


கவிஞர் பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி இலங்கையிலுள்ள திருகோணமலையில் பிறந்தார். எழுபதுகளில் தமிழகத்திற்கு வந்த பிரமிள் “எழுத்து” பத்திரிகையில் தொடங்கி அதன் பின்னர் பல சிறுபத்திரிகைகளில் தன் எழுத்துகள் மூலமாக தமிழ்ச் சிந்தனை மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.


கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், விமர்சனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிற்பம் என எல்லா துறைகளிலும் மேதமை கொண்ட பிரமிள் படைப்புகள் உலகத்தரம் வாய்ந்தவை. இந்திய மண்ணில் வேரூன்றி இருந்த சனாதன தர்மத்தை எவ்வகை தயவு தாட்சண்யம் இன்றி அடித்து வீழ்த்தியவர் பிரமிள்!

பிரமிள் என்கிற படைப்பாளி, விமர்சகர் தோன்றவில்லை என்றால் தமிழ் இலக்கிய உலகம் என்றோ அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும்.


இன்று தமிழிலக்கியத்தில் சரியான படைப்புகளை தருபவர்களாகவும் சாதிமத அழிவுச் சூழலில் சிக்காமல் அற்புதமாக வாழ்பவர்களும் பெரும்பாலும் பிரமிளின் பார்வையை தன்னகத்தே கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்!


வெகுஜன உலகில் அறியப்படாத அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு மேதையின் பெயரைத் தவிர வேறு யார் பெயரை இந்த நூலகத்திற்கு சூட்டுவது ?

'பிரமிள் நூலகம்' நூலகம் மட்டுமல்ல அது ஒரு இயக்கம். தொடர்ந்து தமிழ் படைப்பாக்கத்தை மறுமலர்ச்சிக்கு எடுத்துச் செல்வதும் தலைசிறந்த மனித வாழ்வை சிருஷ்டிக்கவும் இந்நூலகம் தன் அளப்பரிய பங்கை ஆற்றும்.


- மயன் ரமேஷ் ராஜா

பிரமிள் நூலகம்

கைப்பேசி :99429 77800



 



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7