LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 26, 2018

அனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா


கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில்  உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள 7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிடும். அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக, தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.
கங்காழா பஞ்சாயத்தின் தலைவர் பி. பிரதீப் கூறுகையில், “ கேரள போலீஸில் இருந்து தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள் 5 பேரை வரவழைத்து வாரத்தில் இரு நாட்கள் 10வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு குடும்பசிறீ அமைப்புகள் முக்கியக் காரணமாக இருந்தனர் “ எனத் தெரிவித்தார்.
வைக்கம் போலீஸ் நிலையத்தின் துணை ஆணையரும், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹேமா சுபாஷ் கூறுகையில் “ இந்தப் பயிற்சியில் பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள், துன்புறுத்தல், பஸ், பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றைக் கூறி அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தோம்.
தாக்குதல் மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்ட விழிப்புணர்வு போன்றவை இந்தப் பயிற்சியில் அளிக்கப்பட்டது  தற்காப்புக் கலைப் பயிற்சியில் பெண்கள் எளிதாக நினைவு வைத்துக்கொள்ளத் தக்க பயிற்சிகள், தாக்குதல் முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
தற்காப்புக்கலை பயிற்சி எடுத்த 41 வயது பெண் ஜெயஸ்ரீ கூறுகையில் “ குடும்பஸ்ரீ அமைப்பில் பணியாற்றும் எனக்கு பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது சந்திக்கும் சிக்கல்களில் இருந்தும், மிரட்டல்களில் இருந்தும் என்னைக் காத்துக்கொள்ள இந்தப் பயிற்சி தேவை.
எந்தநேரத்திலும் யார் என்னைத் தாக்க வந்தாலும் எதிர்த்துச் சண்டையிட்டு வீழ்த்தும் நம்பிக்கை வந்துவிட்டது. கோழையாகப் பயந்து ஓடாமல், இனி துணிச்சலாக எதிர்த்துச் சண்டையிடுவோம். இனி மக்கள் எங்களை கங்காழா புலிகள் என்று அழைப்பார்கள்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


ஆனால் இந்த வர்மக்கலை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களால் உருவாக்கப்பட்டது தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலை. தமிழ் மண்ணுக்கே உரிய வர்மக் கலை. உடலியல், மனவியல் கலையான இதை உலக மக்கள் நலனுக்காக பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் விஞ்ஞானம் அறியாத அன்றே சித்தர்கள் உருவாக்கினார்கள்.
இந்த வர்மக் கலையை தற்காப்பு கலையாகவும், மருத்துவம் செய்வதற்கும் கற்றுக் கொடுத்தனர். ஆனால் பின்னாளில் வந்த நம் முன்னோர்கள் வர்மத்தை சிலர் தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதால் அதை கற்றுக் கொடுக்காமல் சென்று விட்டதால் அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்தது. வர்மக லையை கற்றுக் கொள்ள வேண்டுமானால் அதை கற்பவர் மனிதாபிமானமிக்கவராகவும், சிறந்த பண்புடையவராகவும், பிறருக்கு உதவுபவராகவும் இருக்க வேண்டும். கோபம் உள்ளவர்கள், தவறான சிந்தனை உள்ளவர்களுக்கு வர்மக்கலை சரிப்பட்டு வராது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் மருத்துவ முறைகளில் பல முன்னேற்றங்கள் வந்தாலும் வர்மக்கலை மருத்துவம், சித்த மருத்துவம் போல் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. *
வர்மம் என்றால் என்ன?
மனித உடலில் 72,000 நரம்புகள் இயங்குகின்றன. நம் உடலில் பிராண வாயு (சக்தி) சுற்றிச்சுழலும் நிலையாக செயல்படுகிறது. பிராண வாயு என்ற சக்தி, தசை நரம்பு, எலும்புகளிலும், சந்துகளிலும் பொந்துகளிலும், பந்துகளிலும் மறைவாய் நின்று இயங்குவதால் மர்மம் அல்லது வர்மம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு உடலில் உள்ள வர்மபுள்ளிகள் எதிர்பாரத விதமாக தாக்கப்படும் போது அந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் உயிர் புள்ளியானது பாதிக்கப்படுகிறது.
அப்போது தான் அந்த இடத்தில் குத்தல், குடைச்சல், எரிச்சல், உயிர் போகும் அளவுக்கு வலியெல்லாம் ஏற்படுகிறது. சில சமயம் நினைவைக்கூட இழக்க நேரிடலாம். வர்ம அடியோ அல்லது வர்ம தாக்குதலோ ஒருவருக்கு ஏற்பட்டால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த நபரை வர்ம சிகிச்சை செய்து நினைவுக்கு கொண்டு வரலாம். வர்ம தாக்குதலால் பாதிக்கப்பட்ட வரை வர்மக்கலை தெரிந்தவரால் மட்டுமே அதை தெரிந்து கொண்டு குணப்படுத்த முடியும். மற்ற எந்த சிகிச்சை முறைக்கும் வர்ம தாக்குதல் குணம் அடையாது.
விபத்துக்களின் போதும், தவறி விழும் போதும், விளையாடும் போது கூட வர்ம அடிக்கு (தாக்குதலுக்கு) ஆளாகி பாதிப்பு வரலாம். வர்ம கஷாயம், வர்ம சூரணங்கள் மற்றும் பச்சிலையை உள்ளுக்கு தருதல். வர்ம எண்ணை, தைலங்கள் போன்றவற்றை மேல் பூச்சாக தடவியும் வர்மம் பாதித்த அந்த நபரை இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். வர்ம சிகிச்சையானது 72 ஆயிரம் நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சீரான நிலைக்கு கொண்டு வருகிறது. உடலில் ஏதாவது ஒரு நரம்பில் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்றால் அதற்கானவர்ம புள்ளிகளை கண்டுபிடித்து இயக்கும் போது தடைப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் உடனே சீர் ஆகும்.
இந்த சிறப்பு வர்ம சிகிச்சையில் மட்டுமே சிறந்த ஓர் அற்புதமானது ஆகும். தசை, நரம்பு, எலும்பு, முறிவு-ஓடிவு எல்லாம் வர்ம கலை சார்ந்ததேயாகும். சித்த வர்மக் கலையை முறையாக கற்றுக் கொள்ள 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். வர்ம ஆசானிடம் வர்ம கலை, நாடி நிலைகள், தச வாயு நிலை, அவை இருப்பிடங்கள், வர்ம புள்ளிகள் இருப்பிடம், வர்ம மருத்துவ சிகிச்சை முறை மற்றும் வர்ம தற்காப்புக் கலை அதாவது அடி முறை (தாக்குதல்) இவைகளை கற்றுக் கொள்வதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலாகவும் கற்றுக் கொள்ளலாம்.
வர்ம கலையில் சரவோட்டம், அமிர்தநிலை, யோக நிலை, வான சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், பஞ்சபட்சி சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், மனித உடலில் இயங்கும் 7 நிலை சக்கரங்கள் மற்றும் அதனை சார்ந்த துணை சக்கரங்கள் உடலில் உள்ள ஆரா, இவைகளையும் சிறிய காலத்தில் கற்றுக் கொள்ளலாம். (ஆரா என்றால் என்ன என்று இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது அறியலாம்)
* வர்மங்களின் வகைகள் :
நம் உடலில் தொடு வர்மங்கள், படு வர்மங்கள், தட்டு வர்மங்கள், பட்சி வர்மங்கள் உள்ளன. இவ்விடங்கள் பாதிக்காதவாறு இருந்தால் நம் உடல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்காது. இவ்வர்ம இடங்களில் தட்டுதலோ அல்லது அடியோ அல்லது அளவுக்கு அதிகமான அழுத்தம் அங்கே ஏற்படும்போது உடலும் வர்மபுள்ளிகளும், வர்ம புள்ளிகள் சார்ந்த உறுப்புகளும் பாதிக்கும். பட்சி வர்மம் பாதிக்கப்பட்டால் ராஜ உறுப்பை பாதிக்க செய்யும்.
எங்கோயாவது உள்ள வர்ம புள்ளிகள் பாதித்தால் அதை சார்ந்த உறுப்புகள் மட்டும் இல்லாமல் அதை சார்ந்த சக்கரங்களும் பாதிக்கும், ஆராவும் பாதிக்கும். மனித உடலில் ஆரா 7 நிற வண்ணமாகவும், இந்த நிறம் வானவில்லின் நிறத்தை போலவும் அமைந்து இருக்கும். ஆரா மனிதனின் சூட்சும சரிரமாக உடலை சூழ்ந்து இருக்கும்.
ஆரா மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகள் பறவைகள், மரம், தாவரங்கள், பழங்கள் போன்றவைகளிலும் இருக்கும். சித்தர்கள், முனிவர்கள் தங்களது சூட்சும கண்களால் மனிதனின் உடலில் உள்ள ஆராவையும், உடலில் சுற்றும் சக்கரங்களையும் பார்த்தார்கள் சக்கரம் என்றால் சுழலுவது என்பதே பொருள். சூட்சம உடலில் சக்கரம் சக்திகளின் மையங்களாக செயல்படுகிறது.
* மனித உடலில் சக்கரங்களின் நிலை மனித உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன.இந்த ஏழு சக்கரங்களில் பெரிய சக்கரங்கள், சிறிய சக்கரங்கள், மிகவும் சிறிய சக்கரங்கள் என பல உள்ளன.
இதன் முதன்மை சக்கரங்கள் வருமாறு:-
1-வது சக்கரம் மூலாதாரம் 2-வது சக்கரம் ஸ்வாதிஷ்டானம், 3-வது சக்கரம் மணிபூரகம், 4-வது சக்கரம் அநாக்தம், 5-வது சக்கரம் விஷித்தி, 6-வது சக்கரம் ஆக்ஞா, 7-வது சக்கரம் சகஸ்ராரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. முதல் சக்க ரத்தை பார்ப்போம்.
1. மூலாதாரம் மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் மூலாதாரச் சக்கரம் உள் ளது. இந்த சக்கரத்தில் தான் குண்டலினி சக்தி யும் உள்ளது. இது மனித னுக்கு மட்டும் அல்ல பறவைகளுக்கும், விலங் குகளுக்கும் அமைந் திருக்கும். மனிதனின் உயிர் ஆற்றல் சக்தியானது முதுகின் அடிப்பகுதியில் இருந்து தலை உச்சி வரை செல்ல கூடிய சூழுமுனை நாடி ஆகும். உடலில் 7 சக்கரங்கள் 7 மையங்களை கொண்டு இயங்குகின்றன. இந்த சக்கரம் உடல் உணர்வு சார்ந்ததாகவும், உடலின் உறுப்புகளையும், சுரப்பிகளையும் உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கின்றன. மனதிற் கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
மூலாதாரச் சக்கரம் சரியாக இயங்காமல் இருந்தால் அவர்களுக்கு, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, உடல் வலிமையின்மை, தன்னம்பிக்கை இல்லாமை, வாத நோய்கள் போன்றவை ஏற்படலாம். மூலாதார சக்கரம் சரியான முறையில் இயங்கினால் மேற்கண்ட நோய்கள் உடலில் அணுகாது. இச்சக்கரம் மனிதன் குழந்தையாக பிறந்த நாள் முதல் 18 மாதங்களில் வளர்ச்சி அடையும்.
7 வயது வரை சிறப்பாக வளர்ச்சி அடையும். பின்பு மற்ற சக்கரங்களை இயக்க வைக்கும். இச்சக்கரம் குழந்தையின் பேச்சு, மொழி, பழக்க – வழக்கங்கள் ஆகியவற்றை முதன்மையாக இயக்குகிறது. இச்சக்கரம் சரியான முறையில் இயங்கினால் குண்டலி சக்தியினை பெற முடியும். குண்டலினி சக்தியை மையமாக கொண்டு தான் மூச்சுபயிற்சி, தியானம், தவம் அல்லது யோக நிலையை அடைய முடியும்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரம் தடவை மூச்சு விட்டு இழுத்து சுவாசிக்கின்றான். ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதமும், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் சுவாசிக்கிறோம். இந்த சுவாசத்தை அதிகம் செலவு செய்யாமல் இருந்தால் 120 ஆண்டுகள் வரை உயிருடன் வாழலாம். மூலாதாரம் எனும் குண்டலினி சக்தியை எழுப்புவதால் அஷ்டாங்க யோகம் அடையலாம். இவை 8 வகைப்படும். 1. இமயம், 2. நியமம், 3. ஆசனம், 4. பிராணயாமம், 5. பிரத்தியாகாரம், 6. தாரணை, 7. தியானம், 8. சமாதி நிலை இவைகளே அஷ்டாங்க யோகம் ஆகும்.
பார்வையாலே சிகிச்சை அளிக்கும் நோக்கு வர்மம் :
வர்மத்தில் தொடு வர்மங்கள் தவிர நோக்கு வர்மம் என்ற ஒன்றும் உள்ளது. தொடு வர்மங்களை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை தொட்டு சரி செய்து குணப்படுத்தலாம். ஆனால் நோக்கு வர்மம் என்பது பார்வையாலே ஒருவரது உடலில் ஏற்பட்டுள்ள வர்ம தாக்குதலை கண்டு பிடிப்பதாகும். வர்ம அசான்களுக்கே உரித்தான இந்த நோக்கு வர்ம கலை மூலம் ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே வர்ம தாக்குதல் எங்கு இருக்கிறது என்பதை கண்டு பிடித்து பார்வையாலேயே குணப்படுத்த முடியும்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7