எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜப்பான், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு, மே 7ஆம் திகதி இயல்பு நிலைக்கு வருவது கடினமானது. வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடத் தயாராக வேண்டும்.
ஊரடங்கை நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாகாண அரசுகளும் இதற்கு தயாராக வேண்டும். ஊரடங்கை நீடிப்பது குறித்து 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும்’ என கூறினார்.
கடந்த, ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீடித்து ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டது.
ஜப்பானின் பயணத் தடை உத்தரவின் மூலம், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நுழைவுத் தடை பெற்ற மொத்த நாடுகளின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை 87 ஆகும்.
ஜப்பானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால், 14,088பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2460பேர் மீண்டுள்ளனர். மேலும், 430பேர் உயிரிழந்துள்ளனர்.