பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவிற்கு, 411 மில்லியன் டொலர்கள் அவசரகால கடன் உதவி வழங்க, சர்வதேச நிதியம் அனுமதி அளித்துள்ளது.மேலும், எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை சுமார் 12 மில்லியன் டொலர் நிதிக்கு, கடன் சேவை கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எத்தியோப்பியாவின் கோரிக்கையையும் அங்கீகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக எத்தியோப்பியா, இந்த தொகையினை செலவிடவுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் தொற்றுக்கு, இதுவரை 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3பேர் உயிரிழந்துள்ளனர். 59பேர் குணமடைந்துள்ளனர்.





