பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் பதிவாகி உள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் மொத்த மரணங்கள் 16,060 ஆக அதிகரித்துள்ளது.புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இனம்காணப்பட்ட +5,850 பேருடன், பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 120,067 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த பல நாட்களில் நிலவிய உச்ச மரணங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மரணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொண்டுவரப்பட்ட முடக்க நிலைக் கட்டுப்பாடுகள், தற்போது பயனளிக்க தொடங்கியிருக்கலாம் எனவும், அதுவே இந்தக் குறைவிற்கு காணம் எனவும், நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மாறாக எதிர் வரும் மாதங்களில் பிரிட்டனின் முடக்க நிலை தளர்த்தப்படுமாயின் கொரோனா வைரஸின் பேரலைத் தாக்கத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





