குறிப்பாக ஐரோப்பாவில் கடந்த 24 மணித்தியால இறப்புகளில் பிரிட்டனும் குறைவான மரண எண்ணிக்கைக்கு கீழிறங்கியது ஆயினும் ஐரோப்பிய நாளாந்த இறப்புகளில் இன்றும் முன்னிலையிலேயே உள்ளது. ஸ்பெயின் +164 இறப்புகளையும், இத்தாலி +174 இறப்புகளையும், பதிவு செய்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவின் +664 என்ற உச்ச இறப்புக்கு அடுத்த நிலையில் பிரிட்டனின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அத்துடன் இத்தாலியின் இறப்பு எண்ணிக்கையை பிரிட்டன் நெருங்கி வருகிறது. பிரான்ஸின் – இறப்பு தரவுகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில்,புதிதாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்ட +4,339 பேருடன், தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 186,599 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை 5pm 30 April 2020 – 5pm 01 May 2020 காலப் பகுதியில் இங்கிலாந்தின் வைத்தியசாலைகளில் மரணமான 56 பேரில், 40 -59 வயதக்கு இடைப்பட்டவர்கள் 2 பேரும், 60 -79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 22 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32பேரும் அடங்குவர் என NHS குறிப்பிட்டுள்ளது.
Total 56
Age group
0-19 0
20-39 0
40-59 2
60-79 22
80+ 32
TBC 0