பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில், முன்னணி சுகாதாரப் பணியாளராக, கொரோனாத் தொற்று நோயாளிகளைக் காப்பதற்காக போராடிய வேளையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தனது உயிரை அர்ப்பணித்த, பிரித்தானியாவின் முதலாவது பெண் மருத்துவராகிவிட்ட, அர்ப்பணிப்பும் புகழும் பெற்ற பிரிட்டிஷ் பாகிஸ்தானியரான மருத்துவர் மமூனா றானாவிற்கு, துன்பத்தில் தோய்ந்துள்ள அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த வகையில் வைத்தியர் ராணாவின் முகம், NHS முன்னணி தொழிலாளர்கள், தமது கடமையின் தொடர்ச்சியில் எதிர்கொள்ளும் திகிலின் வரையறுக்கப்பட்ட உருவமாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் மருத்துவரான மமூனா ராணா, கிழக்கு லண்டனில் தனது கணவர் வைத்தியர் அஜீம் குரேஷி மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.
தனது மனைவிக்கு இதய அஞ்சலியை செலுத்திய, நியூஹாம் மருத்துவமனையின் மூத்த மருத்துவராக இருக்கும், கணவரான வைத்தியர் குரேஷி, வைத்தியர் ராணாவின் நிலை எவ்வாறு விரைவாக மோசமடைந்தது என்பதை விளக்கியுள்ளார். தாம் இருவரும் முன்னணியில் பணிபுரியும் போது தனது மனைவி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி வைத்தியர் ராணா கோவிட் -19 அறிகுறிகளுக்கு உட்பட்டதாக வைத்தியர் குரேஷி ஜியோ.ரிவியிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின், தாம் இருவரும் கொரோனா வைரஸுக்கான நேர் மறைப் பரிசோதனை செய்ததாகவும், ஏப்ரல் 11 ஆம் தேதி, வைத்தியர் ராணாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, கிழக்கு லண்டனில் உள்ள விப்ஸ் குரஸ் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலைக்கு (A&E) கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அவர் ஏப்ரல் 11 ஆம் திகதி இளவரசி அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 16 அன்று அவர் காலமானார்.
“வைத்தியர் ராணா ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணி, எப்போதும் உயர்ந்த சிந்தனைகளை கொண்டிருந்தார், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் முடிவில்லாது கொடுத்தார். அவர் எனக்கு நல்ல மனைவியாகவும் மகளுக்கு நல்ல தாயாகவும் விளங்கினார். சமநிலை, கருணை, புத்திசாலித்தனம், மென்மையான இயல்பு மற்றும் அழகில் அவள் தனித்துவமானவள். ஒவ்வவொரு கணமும் நான் அவளை இழப்பேன்.
எனது மனைவியின் இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் என ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பேரழப்பு” என, கணவரான வைத்தியர் குரேஷி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மமூனா தனது பணியிடத்திலும், நண்பர்கள் மற்றும் சகாக்களின் சமூகத்திலும், அக்கம் பக்கத்திலும், எங்கள் குடும்பத்திலும் மிகவும் பிரபலமாக இருந்தாள். அவள் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்தாள். அவள் எப்போதும் வாழ்க்கையில் நிறைந்தவள், அவள் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியைப் பரப்பினாள். பிறப்பிலேயே நம்பிக்கையாளரான அவள், மனிதகுலத்திற்கு சேவை செய்யும் ஆர்வத்தால் உந்தப்பட்டாள். எங்களுக்கும் எங்கள் மகளுக்கும் அவள் பல திட்டங்களை வைத்திருந்தாள். அவளது இழப்பு ஒரு முழுமையான உதவியற்ற நிலையை உருவாக்கி உள்ளது.”என அவர் வைத்தியர் குரேஷி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிப்போம், அவரிடமிருந்து ஆறுதலையும் சகிப்புத்தன்மையையும் எதிர்பார்க்கிறோம்.” என குரேஷி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் ராணா தனது கணவருடன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். NHS குழுமத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கு முன் பைசலாபாத்தில் உள்ள பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் MBBS மற்றும் சிற்றி யுனிவர்சிற்றி லண்டனில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். அவர் NHS இன் வெவ்வேறு பிரிவுகளில் தனித்துவமான துறைகளில் பணியாற்றினார். ஒரு தீவிர கலைஞராக இருந்த வைத்தியர் ராணா, இஸ்லாமிய எழுத்தோவியங்களையும் வரைந்தார்.
“அவர் மிகவும் மதிக்கப்படுபவர், பெரிதும் மதிக்கப்படுபவர், தொழில்முறையில் உறுதியான மருத்துவர், தனது சக ஊழியர்களால், அவர் பெரிதும் தவறவிடப்படுவார்.” என வைத்தியர் ராணா பணிபுரிந்த, நோர்த் ஈஸ்ட் லண்டன் அறக்கட்டளையின் (தலைமை நிர்வாகி, பேராசிரியர் ஆலிவர் ஷான்லி ஓபி தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை “வைத்தியர் ராணா நமது சமூகத்தின் நல்வாழ்வுக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். வைத்தியர் ராணா தனது வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் வாழ்க்கைக்கு பங்களிப்பை வழங்கினார். ” என பொது மருத்துவ கவுன்சிலின் தலைவர் டேம் கிளேர் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.