சிறுமி குடும்பத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், “ நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பலத்த காயம் அடைந்து வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.