(க.ஜெகதீஸ்வரன்)
இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளரினால்; தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த உறவுகளுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் டித்வா புயலின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பாதையில் பங்குதாரர்களாக விளங்கவேண்டியதன் அவசியம் குறித்தும்; நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் கந்தசாமி ஹரிகரராஜ் அவர்களினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்; பணிப்பாளர்களான திரு.T.இதயகுமார் , திரு.S.தயாளசீலன், திரு.N.நேசகஜேந்திரன், திரு.Y.C.சஜீவன், திரு.A.ஜெயக்குமணன் அவர்களும், கணக்காளர் திரு.வே.வேல்ராஜசேகரம், பதில் நிருவாக உத்தியோகத்தர் A.M.றியாழ்; உள்ளிட்ட வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் உத்தியோகத்தர்களுக்கு இனிப்புப் தின் பண்டங்களும் வழங்கப்பட்டது.
இறுதியாக யு.ஜெயக்குமணன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.








.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

