LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 26, 2026

ஓய்வூதியத்தை எதிர்பார்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றமாம்

(கஜென்)

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடமாற்ற கட்டளை  தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் அபுசாலி முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டு நியமனம் பெற்று 21 வருடங்களாக சேவையாற்றி ஒய்வு பெறப்போகும் தருவாயில் திருகோணமலைக்கு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குஇடமாற்றம் வழங்கப்பட்டது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்ச்சியுற்றுள்ளதாக மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் களுவாஞ்சிகுடியில் ஒன்றுசேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கடந்த 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் யுத்த காலத்தில் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்டஇடமாற்றம் தமக்கு உளவியல்இ உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

குறித்த விடயம் பிரதம செயலாளருடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் சட்ட ரீதியாக குறித்த இடமாற்றத்தை அணுகுவது தொடர்பில் பிரசித்தமான சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7