புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த “தேசிய இலக்கிய விருது வழங்கல் - 2024“ 2026 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி, சனிக்கிழமை (இன்று) மு.ப. 10.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய இல் உள்ள பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையின் இலக்கியத்துறையில் கால்பதிக்கும் இளம் படைப்பாளிகளில் தேசிய மட்டத்தில்
வெற்றியீட்டியவர்களை கௌரவிக்கும் இவ்விழாவில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த
தேசிய இலக்கியப் போட்டித் தொடரில் அதி சிரேஷ்ட பிரிவில் பங்குபற்றி இலக்கிய
விமர்சனம் போட்டியில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட வாழைச்சேனை
இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையின் மாணவி திரு.திருமதி. ஜெயரஞ்சித் - ஸோபா அவர்களின் இளைய மகளான செல்வி.ஜெ.அத்விஹா அவர்களுக்கு பரிசுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





