
துஷ்பிரயோக செயற்பாட்டிற்கு என்கவுண்டர் போன்ற தண்டனையே விதிக்கப்படும் என அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தெலுங்கானா என்கவுண்ட்டரை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்று போராடுகிற பிள்ளைகள் நாங்கள்.
ஆனால் பெண்களை போதைப் பொருளாக, நுகர் பொருளாக கருதி வன்புணர்வு செய்யும் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் மீதான குண்டர் சட்டம் 90 நாட்களில் இரத்து செய்யப்பட்டது கொடுமையானது. அது வரலாற்று பெரும் பிழை.
எந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்களோ அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 4 பேரை சுட்டால்தான் மக்களிடம் அச்சம் பரவும். மரணம் ஒன்றுதான் இவர்களை ஒழுங்காக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
