துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் கடந்த 2018 ஆம் 5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து குழந்தையின் மருத்துவ பரிசோதனை மற்றும் குழந்தை அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குமரேசன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.