மஸ்கெலியா-நல்லதன்னி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த பாதையில் பலத்த காற்று காரணமாக மரங்களும் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.