LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C



ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, December 7, 2019

சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது – உலக வங்கியிடம் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை!

சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் உலக வங்கி சீனாவுக்கு கடன் வழங்குகிறது? இது சாத்தியமா? சீனாவிடம் ஏராளமான பணம் இருக்கிறது. இதனை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தில் சீனாவுக்கு நிதி வழங்க உலக வங்கி அண்மையில் ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் இராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார நாடுகளுக்கு உலக வங்கி கடன் வழங்கக்கூடாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பாக பனிப் போர் நிலவி வரும் நிலையில் சீனாவுக்கு கடன் வழங்கும் உலக வங்கியின் முடிவை அமெரிக்கா விமர்சித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7