ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து கொடுக்கப்பட்ட அளுத்தம் காரணமாக பதவி விலகிய ரிசாட் பதியுதீன் உட்பட 9 அமைச்சர்களில் நான்கு பேர் இன்று மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.அதனை கொண்டாடும் முகமாக அவரின் ஆதரவாளர்கள் வவுனியா சந்தைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இரவு வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர் ரிசாட் பதியூதீன், மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கடந்த மே மாதம் உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் 9 பேரும் தமது பதவிகளை ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்திருந்தனர்.
இதில் ஏற்கனவே இருவர் தமது அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இன்று 4 பேர் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சுப்பதைவிகளை ஏற்றுக்கொண்டனர்





