
தமிழ் மக்கள் பேரவையின் மையக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழ் மக்கள் பேரவையினால் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிரகாரம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற சிங்கள, முஸ்லிம் முற்போக்கு அமைப்புக்களும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் ஆதரவை வழங்கி குறித்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவிக்க மனமின்றி காலம் கடத்தப்படுகிறது. இந்த வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பேரணியாக எழுச்சிபெற்று தமிழ் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வோம் என தமிழ் மக்கள் பேரவை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தமிழினம் வாழ்வதற்கான எழுகை. உங்கள் ஒவ்வொருவரின் வரவும் நிச்சயம் சர்வதேச சமூகத்திடம் மிகப்பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் செப்டெம்பர் 7 ஆம் திகதி பேரலையாய் எழுந்து பேரணியில் கலந்து கொள்ளுங்கள் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
