
வேலூர் தொகுதிக்கு இன்னும் ஒருவாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் வேலூரில் அ.தி.மு.க. தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய வந்தோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது
அந்தவகையில் சுமார் 400இற்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
