
செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்ட ரீதியானதென, நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கு முன்னால் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தான் தயாரென, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாத காரணத்தால், பிரதமர் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார் என்பதன் அடிப்படையில் அவரை தெரிவுக் குழுவுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் பாதுகாப்பு சபையினைக் கூட்டுவதில் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதில் பங்கேற்பதில் இருந்த நெருக்கடிகள் குறித்து பிரதமர் இதன்போது சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
