
முன்வைக்கப்பட்ட கோரிக்கையினைத் தொடர்ந்தே மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்தது மக்களின் பாதுகாப்புக்காகவே எனவும், தற்போது ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரிஷாட் பதியுதீனும் மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
