
சிறைபிடிக்கும் ஈரானின் முயற்சி குறித்து பிரித்தானியா மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் இத்தகைய நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் பிரதமர் தெரேசா மே-யின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரித்தானிய எண்ணெய்க் கப்பலொன்றை ஹோர்மூஸ் நீரிணையில் வைத்து இடைமறிக்க ஈரானியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரித்தானியப் போர்க்கப்பலின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமரின் செய்தித்தொடர்பாளர்,
ஈரானின் இந்த நடவடிக்கையால் நாங்கள் கவலை கொண்டுள்ளோம், அதிகரித்து வரும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஈரானிய அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
வளைகுடாவில் பிரித்தானியாவுக்கு நீண்டகால கடல் இருப்பு உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சர்வதேச சட்டத்தின்படி கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்தைப் பராமரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ஆனாலும் இத்தகைய நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
