
தெரியாத மன்னார் மாவட்டத்தின் ஒருசிலர் தேவாலயத்தை அடாத்தாக அமைத்துவிட்டு வளைவு அமைக்கத் தடைபோடுவதாக வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவர்களோடு இனிமேல் சமரசத்திற்கு இடம் கிடையாது எனவும், கல்வாரி மலையில் யாத்திரை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒட்டுமொத்த இந்துக்களும் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அமைப்பதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கண்டனப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “தமிழர்களினதும், சிவபூமியினதும் வரலாறு தெரியாத மன்னார் மாவட்டத்தின் ஒருசிலர் தேவாலயத்தை அடாத்தாக அமைத்துவிட்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவை அமைக்க விடாமல் மிகவும் கடுமையான மதவாதத்தை மன்னாரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிவபூமி எப்போது வந்தது மறைமாவட்டம் எப்போது வந்தது?
சிவபூமி என்பதை ஏற்கமுடியாது என்று ஒரு முறை ஆயர் கூறியிருந்தார். அப்படியானால் மறை மாவட்டத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?
எனவே தொடர்ச்சியாக இந்துக்களை துன்புறுத்தி ஒடுக்கிவரும் மன்னார் கத்தோலிக்க மதவாதிகளால் வளைவு அமைப்பதற்கு இனியும் தடை ஏற்படுத்தப்பட்டால் வவுனியாவில் அமைந்துள்ள கல்வாரி மலையில் யாத்திரை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒட்டுமொத்த இந்துக்களும் எதிர்ப்பை வெளியிடுவோம்.
உங்களோடு இனிமேல் சமரசத்திற்கு வருவதற்கு எமது மனம் இடங்கொடுக்காது. சைவத்தையும் தமிழரின் வரலாற்றையும் முதலில் படியுங்கள். இது தொடர்பாக ஆயருடன் விவாதம் செய்ய நான் ஆவலாக இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.
