
அமெரிக்க எல்லைப்பகுதியான பனாமா பிரதேசத்தில் சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவர் ஊடாக அமெரிக்கா செல்ல முயற்சித்த இளைஞர்களில் ஒருவரே, பனாமாவின் ஏரி சேற்றுப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த பீ.சுதர்ஷன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பனாமா ஏரி பிரதேசத்தில் நடை பயணத்தை மேற்கொண்ட இவர், சேற்றுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பனாமா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
