
வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இதனை மெய்ப்பிக்கின்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான ஹேஷான் விதானகே, ரிஷாட் பதியுதீனும் மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையை கொண்டுவரவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
