
இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தனது ஓய்வு குறித்து தெரிவித்தார்.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் திறமையாக செயற்பட்டமையை பாராட்டிய ஆளுநர் இந்த சேவையை ஆற்றியமைக்கு தனது நன்றியினையும் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை மக்களுடன் நட்புறவுடன் சேவையாற்றிய கட்டளைத் தளபதியை யாழ் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்த ஆளுநர் ஓய்வு பெற்றாலும் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ஆளுநர் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசினை வழங்கினார்.
