அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கனேடிய பிரதமரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், அவரின் அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நாட்டின் அரச தலைவர், மற்றுமொரு நாட்டுடன் நெருங்கிய உறவுகளை பேணும் நோக்கில், மற்றைய நாட்டின் அரச தலைவருக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கான அழைப்பை விடுப்பதே வழமை.
இதற்கான தகவல் பரிமாற்றங்கள் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது திகதிகள் சம்பந்தமான பிரச்சினை இருந்தால், அழைப்பு விடுத்த தலைவரை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பது வழமையான நடைமுறை.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை கனேடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் தமது நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
