
அவரது தந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சாஸ்கடூன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும் எட்மன்டன் பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை Juan Pablo Carmona Real மற்றும் அவரது மகள் Itzel Delreal Daniels, ஆகியோர் மதியம் மாயமானதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த குழுந்தை தனது தந்தையுடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது, அவர்கள் இருவரும் எட்மன்டன் பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
