
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஹென்றி டிபேன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கையில், முகிலன் இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முகிலன் தொடர்பாக தகவல் தெரிவித்த சண்முகத்திற்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். பொலிஸார் பொறுப்புடன் செயற்பட்டு விரைவிலேயே முகிலனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முகிலனிடம், சி.பி.சி.ஐ.டியினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், ஹென்றி டிபேன் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கூடங்குளம் அணுவுலை ஆலைக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் வேலூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
