
செய்வதற்கான நடவடிக்கைகளை இடைநிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டது. இதன்போது இந்த முடிவுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
சீன சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டால் இராஜினாமா செய்வதாக கடந்த வாரம் புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கான தேசிய அதிகார சபையின் தலைவர் எச்சரித்திருந்தார்.
குறித்த எச்சரிக்கையினை புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித அபேயகோன் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு விடுத்திருந்தார்.
சீனாவிலிருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது புகைப்பழக்கத்தை ஊக்கப்படுத்தும் என்றும் இது அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
