
விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலுடன் மோதியதிலேயே குறித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கெட்டபுலா பகுதியைச் சேர்ந்த 27வயதுடைய தாயும் 07வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகாக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
