சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 1ஆம் திகதி முதல் இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பெற்றுவரும் ஆண்டு வருமானமான 207,100 டொலர்களுக்கு மேலதிகமாகவே இந்த சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
இந்தநிலையில் சம்பள உயர்வு அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சுமார் ஏழு இலட்சம் பணியாளர்களுக்குரிய விடுமுறை மற்றும் வார இறுதி நாள் விசேட ஊதியங்களுக்கு அரசாங்கம் வேட்டு வைத்துள்ள நிலையில் ஏற்கனவே உயர் ஊதியங்கள் பெரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பலரும் சாடியுள்ளனர்.
இதேவேளை, சுமார் ஐந்து இலட்சம் டொலர்களை வருட வருமானமாக பெற்றுக்கொள்ளும் பிரதமர் Scott Morrison-இன் சம்பளம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மேலும் பத்தாயிரம் டொலர்களினால் அதிகரிக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






