ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகநீண்டகால விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இறுதிவரை நீடிக்கவுள்ளதாக முற்போக்கு கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தோடு அடுத்த மத்திய பொதுத்தேர்தலின் பின்னரே சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தக் காலப்பகுதியில் கோடைகால விடுமுறையினை அறிவிக்கும் ஒன்ராறியோ சட்டமன்றம், ஜூன் மாதத்தில், தொழிலாளர் நாளுக்கு பின்னர் மீண்டும் கூடுவது வழமை என்ற போதிலும், இம்முறை ஒக்ரோபர் மாதம் 28ஆம் திகதியே மன்று மீண்டும் கூடவுள்ளது.





