நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முறைப்பாடுகளுக்காக விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றில் அறிவித்தார்.அவ்வகையில், பொலிஸ் தலைமையகத்தில் குறித்த விசேட பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவர் மீதாவது குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அவர் குறிப்பிட்ட முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டு பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை உறுப்பினர்கள் பதிவு செய்ய முடியும்” என அவர் குறிப்பிட்டார்





