பாடசாலை ஒன்றுக்கு வெளியே இரண்டு பதின்மவயதுச் சிறுமிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிட்லாண்ட் அவென்யூ மற்றும் லூக்கி அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
13 வயதான அந்தச் சிறுமிகள் இருவரும் வீதியைக் கடக்க முயன்றபோது, அந்த வழியே வந்த வாகனம் அவர்கள் மீது மோதியதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருவரும் பாரதூரமான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தச் சிறுமிகள் மீது மோதிய வாகனத்தின் 64 வயது சாரதி சம்பவ இடத்திலிலேயே தரித்திருந்ததாகவும், விபத்தினை அடுத்து அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுமிகள் இருவரும் சேர் அலெக்ஸ்சான்டர் மக்கன்சி உயர்நிலை அரச பாடசாலை மாணவிகள் என்பதனை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.






