போர்ட் பெர்ரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த 6 வயதுக் குழந்தை உலங்குவானூர்தி
ஊடாக ரொறன்ரோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரீச் வீதி மற்றும் பழைய சிம்கோ வீதி அருகே மாலை 4:30 மணியளவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக டேரம் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு டேரம் பிராந்திய பொலிஸார் சென்றபோது கார் ஒன்றும் ட்ரக் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியிருந்துள்ளது.
இதில் காரில் பயணம் செய்த குழந்தை படுகாயமடைந்ததாகவும் இதன் பின்னர் உலங்குவானூர்தி ஊடாக ரொறன்ரோ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தினை அடுத்து குறித்த வீதி பல மணிநேரங்கள் மூடப்பட்டதாகவும், விசாரணைகள் முடிந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





