க்கொன்று மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) பகல் 2.28 மணியளவில், கிங்ஸ்வே மற்றும் நெல்சன் அவென்யூ சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவ்விபத்துக்கு வேகம் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்து இடம்பெற்ற போது பதிவான காணொளிகள் எதுவும் இருந்தால், விசாரணைகளுக்காக தம்மிடம் தருமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
