விடுப்பதன் ஊடாக மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முனைகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல் முஹம்மட் நசீர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தை வைத்து இனங்களுக்குள் வன்முறையை ஏற்படுத்த சுபத்திரா ராமய விகாராதிபதி முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் முஸ்லிம் மக்கள் அப்பகுதியில் நீடகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் செயற்பாடு கவலையளிப்பதாக அவர் கூறினார்.
மேலும் இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் கட்சிகள் இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
