ப்பட்ட நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த மக்கள் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கிலான ஆற்றுப்படுத்தல் பயணமாக மன்னார் மறை மாவட்ட திருத்தலங்களை தரிசிக்கும் நோக்கில் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் இரண்டு நாட்கள் மன்னாரில் தங்கவுள்ளனர்.
கொழும்பு மறைமாவட்ட விசுவாசத்தைப் பரப்பும் அமைப்பின் பொறுப்பாளர் அருட் தந்தை பிரசாத் கர்ஸண் அடிகளாரின் வழி நடத்தலில், இந்த சுற்றுப்பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த மக்கள், மன்னார் மறைமாவட்டத்தின் மடுத் திருத்தலம், மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம், மன்னார் தோட்டவெளி மறை சாட்சிகளின் இராக்கினி ஆலயம் போன்ற யாஸ்திரிக தலங்களுக்குச் சென்று, இறை வழிபாட்டில் ஈடுபட்டதுடன் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது அமைப்பினருடனும் உரையாடல்களில் ஈடுபட்டனர்.
அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி ஆலயத்தில் மாத்திரம் நூறுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






