ளுக்காக நிதிக்கட்டுப்பாட்டு செயன்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின்போது குருமாருக்கான நிதி அதிகளவில் செலுத்தப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக பல இந்துக்கள் தமது மத ரீதியான சடங்குகளை செய்வதில் பின்நிற்பதுடன் அது இந்து மதத்தின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சடங்குகளுக்கான செலவுகளும் அதிகரிப்பதனால் மத மாற்றத்திற்கு இந்துக்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டு பிற மதங்களை தழுவிக்கொள்ளும் நிலையும் உள்ளது.
எனவே இந்து மத குருக்களுக்கு சடங்குகளின் போதும் திருவிழாக்களின் போதும் வழங்கப்படக்கூடிய கொடுப்பனவுகளை வரையறுத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து ஆலயங்களின் நிர்வாகத்தினரின் ஒன்றியம் கவனஞ்செலுத்தி இந்து மத வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என இந்து மக்கள் கோரியுள்ளனர்






