நாங்கள் வீசிய கழிவுகளை நாங்களே அள்ளுவோம்” எனும் தொனிப்பொருளில் இளைஞர்கள் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் உள்ள வல்லை பாலத்தில் இருந்து ஸ்ரீ உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயம் வரையிலான வீதியின் இரு மருங்கிலும் வீசப்பட்டிருந்த பிளாஸ்ரிக் கழிவுகளை இதன்போது அவர்கள் துப்பரவு செய்துள்ளனர்.
பிளாஸ்ரிக் கழிவகற்றும் செயற்திட்டத்திற்காக பேஸ்புக்கின் ஊடாக இளைஞர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
குறித்த அழைப்பின் அடைப்படையில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு குறித்த இடத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள் காலை 09 மணி வரையில் அவ்விடத்தில் இருந்த கழிவுகளை அகற்றி பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனத்திடம் ஒப்படைத்தனர்.
குறித்த செயற்திட்டத்தில் சிறுவர்கள் பெண்கள் என வயது வேறுபாடின்றி பலரும் இணைந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது






