) வெளியாகியிருந்த நிலையில், குறைந்தளவு புள்ளிகளைப் பெற்ற தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி, நீட் தேர்வில் 600 புள்ளிகளுக்கு 490 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், மருத்துவக் கல்வியினைத் தொடர முடியாததால் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற குறித்த மாணவி, பெறுபேறு குறைவாக இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது வீட்டார் ஆறுதல் கூறியிருந்தபோதும், வீட்டில் யாருமற்ற வேளையில் ரிதுஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இவ்வருடத்திற்கான மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றிருந்த நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் பங்குபற்றியிருந்ததுடன் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, கடந்த நீட் தேர்வுகளில் மாணவி அனிதா உட்பட மேலும் சில மாணவிகள் தமது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






