னால் மாதிரிக் கிராமங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ‘செமட்ட செவன’ வேலைத் திட்டத்தின் கீழ் தம்பகாமம் வண்ணாங்கேணியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆராதி நகர் மற்றும் சஞ்சீவி நகர் ஆகிய கிராமங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குறித்த மாதிரிக் கிராமங்களின் 32 பயனாளிளுக்கான காணி உரிமங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.
அத்துடன் 7.5 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு முதற்கட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.






