பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டான் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் லோற்றே ஷெரிங்கை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.
திம்பு விமான நிலையத்தில் அவருக்கு பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் டன்டி டோர்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் இந்தியா – பூட்டான் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்திய ஜெய்சங்கர், நேபாளப் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, நாளை வரை திம்புவில் தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பூட்டான் மன்னர் ஜிக்மே கெஷர் நம்கியல் வாங்சுக்கை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இந்தியா – பூட்டான் இடையே பொருளாதார மேம்பாடு, புனல்மின்சார உற்பத்தி உட்பட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






