0 வருடங்களில் நாடு பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி இதனை தடுக்க அனைவரும் தத்தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள பைன் மரங்களை அகற்றி அதற்கு பதிலாக அங்கு உள்நாட்டு வன வளர்ப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “28 சதவீதமாகக் காணப்படும் இந்நாட்டின் வனப் பரம்பல் வருடாந்தம் 1.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு வனப்பரம்பல் வீழ்ச்சியடையுமாயின் 15 – 20 வருடங்களுக்குள் நாடு பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது.
எனவே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக நாட்டின் வன வளங்களைப் பாதுகாப்பதற்கு அனைவரும் நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டும்.” என மைத்திரிபால சிறிசேன கூறினார்.






